மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முயற்சித்த போலி மருத்துவர் கைது

Report Print Kamel Kamel in சமூகம்

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல முயற்சித்த போலி மருத்துவர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மருத்துவர் என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு இவ்வாறு ஒரு மாவட்டத்திலிருந்து மற்றுமொரு மாவட்டத்திற்குள் பிரவேசிக்க முயற்சித்த ஒருவரை மாத்தறையில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ராகம பகுதியில் அமைந்துள்ள தனியார் மருத்துவமனையில் கடமையாற்றி வருவதாக குறித்த நபர் போலியான தகவல்களை வழங்கியுள்ளார்.

குறித்த நபர், மருத்துவர்கள் வாகனங்களில் பயன்படுத்தும் ஸ்டிக்கர் ஒன்றை பயன்படுத்தியிருந்தார் என பிரதிக் காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கம்பஹா மாவட்டத்தைச் சேர்ந்த குறித்த நபர் கொழும்பு, களுத்துறை, காலி ஆகிய மாவட்டங்களை போலியான தகவல்களை காண்பித்து கடந்து சென்றுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நாளை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளார்.