சுகாதார துறையினர் மற்றும் பாதுகாப்பு துறையினருக்கு நன்றி தெரிவித்து வவுனியாவில் பதாதைகள்!

Report Print Thileepan Thileepan in சமூகம்

கொரோனா (கொவிட் -19) இலிருந்து எமது தாய் நாட்டு உயிர்களை பாதுகாப்பதற்காக தன்னலமற்ற சேவையினை வழங்கும் சுகாதார துறையினர் , முப்படையினர் , காவல்துறையினர் மற்றும் ஏனைய துணைப்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து வவுனியா நகரின் பல்வேறு பகுதிகளிலும் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

நன்றி தெரிவிக்கும் பதாதைகள் வவுனியா புதிய பேருந்து நிலையம் , மணிக்கூட்டுச்சந்தி , வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு முன்பாகவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இப்பதாதைகளுக்கு வவுனியா பத்தினியார் மகிழங்குளம் ஓயார் சின்னக்குளம் பகுதி கிராம மக்கள் , மகிந்தோய தொண்டர் படையணி மற்றும் கொரோனா நலன்புரி விழிப்புணர்வு பிரச்சாரக்குழுவினர் உரிமை கோரியுள்ளனர்.