சாதாரண தரப்பரீட்சையில் தோற்றிய பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் 9 ஏ சித்திகள்

Report Print Kamel Kamel in சமூகம்

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 10346 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் ஏ சித்தி பெற்றுக்கொண்டுள்ளனர்.

இதேவேளை, பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 73.84 வீதமான மாணவர்கள் கல்விப்பொதுத்தராதர உயர்தரம் கற்பதற்கு தகுதி பெற்றுக்கொண்டுள்ளனர்.

எவ்வாறெனினும், புதிய கல்விக் கொள்கைக்கு அமைய பரீட்சையில் சித்தி எய்த தவறிய மாணவர்களும் உயர்தரத்தில் தொழில்நுட்ப பாடங்களை கற்பதற்கு விண்ணப்பம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சாதாரண தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களில் 68. 82 வீதமான மாணவர்கள் கணித பாடத்தில் சித்தி எய்தியுள்ளனர்.