மட்டக்களப்பில் கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை

Report Print Kumar in சமூகம்
148Shares

மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் மூன்று கசிப்பு உற்பத்தி நிலையங்களும், கசிப்பு உற்பத்திக்கான மூலப்பொருள் விநியோகிக்கும் இரண்டு இடங்களும் முற்றுகையிடப்பட்டுள்ளன.

இந்த நடவடிக்கையானது நேற்று காலை முதல் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முன்னெடுக்கப்பட்டு வரும் பொலிஸ் ஊரடங்கினை பயன்படுத்தி சட்டவிரோத மதுபான உற்பத்தி நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

இந்த நிலையில் அவற்றினை கட்டுப்படுத்தும் வகையில் மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன்கீழ் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின்போது ஐந்து வீடுகள் இவ்வாறு முற்றுகையிடப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதில் மூன்று வீடுகளில் கசிப்பு உற்பத்திகள் நடைபெற்றுவந்த நிலையில் முற்றுகையிடப்பட்டதுடன், அங்கிருந்து கசிப்பு தயாரிக்க பயன்படும் உபகரணங்கள், கசிப்பு உற்பத்திகான மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதேபோன்று வேறு இரு வீடுகளில் இருந்து கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடாக்கள் மீட்கப்பட்டுள்ளன.