இலங்கையில் மூடப்பட்ட சில பகுதிகள் இன்று விடுவிக்கப்பட்டன

Report Print Tamilini in சமூகம்
467Shares

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்ட சில பகுதிகள் தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட்டு வந்துள்ளன.

அந்தவகையில் களுத்துறை மாவட்டத்தின் பேருவளைப் பகுதியில் 5 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

சீனகொட்டுவ, பன்னில அக்கரகொட, அம்பேபிட்டிய மற்றும் கரந்தகொட ஆகிய பகுதிகளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கண்டி மாவட்டத்தில் அக்குறணை பகுதியும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இவற்றுள் கண்டி அக்குறணை, மற்றும் பேருவளை, பன்னில, சீனங்கோட்டை பகுதிகள் இன்று விடுவிக்கப்பட்டன.

மேலும் முடக்கப்பட்ட பகுதிகளான கொழும்பு மாவட்டத்தில் கிராண்ட்பாஸ் பகுதி, அருணாலோக மாவத்தை, இம்மானுவேல் ஆரூஸ் மாவத்தை, நாகலகம் வீதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

கம்பஹா மாவட்டத்தின் ஜா எல – சுதுவெல பகுதி தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. புத்தளம் மாவட்டத்தில் அட்டவில்லு கிராம மக்கள் சுயதனிமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், கடுமையான்குளம் கிராமம் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்டத்தில் அக்கரைப்பற்று 19ஆம் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.