ஒப்பந்த ஊழியர்களை சம்பளமின்றி விடுமுறையில் அனுப்பியுள்ள ஸ்ரீலங்கன் நிறுவனம்

Report Print Steephen Steephen in சமூகம்
153Shares

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த சுமார் 400 ஊழியர்களை உடனடியாக சம்பளமற்ற விடுமுறையில் அனுப்பி வைக்க ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவல் காரணமாக விமான சேவைகள் நடைபெறாது, நிறுவனம் பெரும் நஷ்டத்தில் இயங்கி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வீடுகளில் இருந்து வெளியில் செல்ல முடியாத நிலைமை காணப்படும் சூழலில் ஊழியர்கள் சம்பளமின்றி விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், அவர்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஒப்பந்த ஊழியர்களுக்கு பதிலாக அரசாங்கத்திற்கு நெருக்கமான வேறு சிலரை பணியில் இணைத்துக்கொள்ளும் நோக்கில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் இவ்வாறு விடுமுறையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.