நாட்டுக்கும் மக்களுக்கும் நலன் வேண்டி வழிபாடுகளில் ஈடுபட்ட ஜனாதிபதி

Report Print Steephen Steephen in சமூகம்
142Shares

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, நாட்டுக்கும் மக்களுக்கும் நலன் வேண்டி நேற்று பிற்பகல் அனுராபுரத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க புனித வெள்ளரச மரத்திற்கு அருகில் சமய வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.

அனுராதபுரம் சென்ற ஜனாதிபதி, கலாநிதி பல்லேகம ஸ்ரீனிவாச தேரரை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டுள்ளார்.

அத்துடன் ருவான்வெளி சேய தாது கோபுரத்திற்கு அருகில் இன்று காலை நடைபெற்ற பால் உணவு பூஜையிலும் ஜனாதிபதி கலந்துக்கொண்டுள்ளார். அங்கு செத் பிரித் ஓதலும் நடைபெற்றுள்ளது.

ருவான்வெலி சேய விகாரதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரை சந்தித்த ஜனாதிபதி, அவரிடமும் ஆசிப் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனையடுத்து மிரிஸ்வெட்டிய ரஜமஹா விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, விகாராதிபதி ஈத்தலவெட்டுனுவெவே ஞானதிலக்க தேரரை சந்தித்துள்ளார்.

கொரோனா வைரஸ் ஒழிப்பது தொடர்பி்ல் அரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டங்கள ஜனாதிபதி, தேரருக்கு தெளிவுப்படுத்தியுள்ளார்.

அத்துடன் அனுராதபுரம் ஸ்ரீ சம்புத்த ஜயந்தி விகாரைக்கு சென்ற ஜனாதிபதி விகாரதிபதி நுகேதென்னே பஞ்ஞானந்த தேரரை சந்தித்து ஆசிப் பெற்றுக்கொண்டுள்ளார்.