வவுனியாவில் திடீரென தீப்பற்றி எரிந்த வீடு

Report Print Theesan in சமூகம்
83Shares

வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் அமைந்துள்ள தற்காலிக வீடொன்று இன்று திடீரென தீ பிடித்து எரிந்துள்ளது.

குறித்த பகுதியில் வசிக்கும் வறிய குடும்பத்துக்கு சொந்தமான தற்காலிக வீடொன்றிலேயே சமைக்கும் போது இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீ பரவுவதை அவதானித்த அயலவர்கள் உடனடியாக தண்ணீரை ஊற்றி தீயினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.

இந்த தீ விபத்தினால் எவ்வித உயிராபத்துக்களோ, சேதங்களோ ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.