ஷஹ்ரான் ஹாசிமிற்கு உதவிய அரச சார்பற்ற அமைப்பின் ஆலோசகர் கைது

Report Print Ajith Ajith in சமூகம்
255Shares

சிலாபம் - கல்பிட்டியை சேர்ந்த அரச சார்பற்ற அமைப்பின் ஆலோசகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேகநபர் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் மூலகர்த்தா என கூறப்படும் ஷஹ்ரான் ஹாசிம் விரிவுரை செய்வதற்கும், ஆயுத பயிற்சி வழங்குவதற்கும் ஏற்பாடுகளை செய்து கொடுத்துள்ளதாக இவர் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.