குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு மங்கள சமரவீரவிற்கு அறிவிப்பு

Report Print Kamel Kamel in சமூகம்
171Shares

குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலையாகுமாறு முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இன்றைய தினம் பிற்பகல் 2 மணிக்கு குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்டத்தில் தங்கியுள்ள 12500 இடம்பெயர் மக்கள் கடந்த ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தமை தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த இடம்பெயர் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுத்தமைக்காக புத்தளம் மாவட்டத்தின் இலங்கை போக்குவரத்துச் சபை கிளைக்கு பணம் வழங்கப்பட்டமை குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளதாக பொலிஸ் உள்வட்டாரத் தகவல்களை மேற்கோள்காட்டி தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இடம்பெயர் மக்களுக்கு போக்குவரத்து வசதிகளை செய்து கொடுக்குமாறு இடம்பெயர் அமைப்பினால் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு இடம்பெயர் மக்கள் போக்குவரத்து செய்த பேருந்துகளுக்கான கொடுப்பனவை மேற்கொள்ள முன்னாள் நிதி அமைச்சர் மங்கள அனுமதி வழங்கியிருந்தார் என தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கு மேலதிகமாக வேறும் பல விடயங்கள் தொடர்பிலும் மங்களவிடம் வாக்கு மூலங்கள் பெற்றுக்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.


You may like this video...