மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு தனியார் பேருந்து சேவைகள் ஆரம்பம்

Report Print Ashik in சமூகம்

மன்னாரில் இருந்து வெளி மாவட்டங்களுக்கான தனியார் போக்குவரத்துச் சேவைகள் இன்று முதல் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தலைவர் ரி. ரமேஸ் தெரிவித்துள்ளார்.

தனியார் போக்குவரத்து சங்கத் தலைவர் கெமுனு விஜயரெட்ன மாவட்ட தனியார் பேருந்து உரிமையாளர் சங்கப் பிரதிநிகளுக்கு தெரியப்படுத்தியமைக்குஅமைவாக இன்று முதல் தனியார் பேருந்துகள் வெளி மாவட்டங்களுக்கு சேவையை ஆரம்பித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்திற்குற்பட்ட வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி,ஆகிய மாவட்டங்களுக்கு தற்போது சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மேலும் வடக்கில் உள்ள குறித்த மாவட்டங்களில் இருந்தும் பேருந்துகள்மன்னாரிற்கு வருகை தர உள்ளது.

ஆனால் அரசாங்கம் அறிவித்துள்ள சுகாதார நடை முறைகளை கட்டாயம் பின் பற்றுவதுடன்பயணிகள் முகக்கவசங்கள் அணிந்து வர வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சனிடம் முன் வைத்த கோரிக்கைகளுக்கு அமைவாக மன்னார் நகர சபை பணியாளர்களின் உதவியுடன் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் கிருமி தொற்று நீக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு,அதன் பின்னர் சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதெனவும் தெரிவித்துள்ளார்.