ஓட்டமாவடியில் இரண்டாம் கட்ட நிவாரண கொடுப்பனவு இன்று ஆரம்பம்

Report Print Navoj in சமூகம்

மட்டக்களப்பு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிற்கு உட்பட்ட ஓட்டமாவடியில் சமூக நிவாரணமான 5000 ரூபா, 2ஆம் கட்ட கொடுப்பனவு இன்று ஆரம்பமானது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளரின் வழிகாட்டலில் சமுர்த்தி முகாமையாளரின் கண்காணிப்பில் இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.

சமுர்த்தி வங்கி முகாமையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இணைந்து இந்த கொடுப்பனவை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

கொரோனா வைரஸ் மூலம் பாதிக்கப்பட்டோர், சமுர்த்தி பட்டியலில் உள்ளவர்கள், காத்திருப்பு பட்டியலில் உள்ளவர்கள், தொழில் பாதிப்பிற்குள்ளானவர்கள், மேன் முறையீட்டு மூலம் கொடுப்பனவிற்கு தயாரானோர் போன்றோர்களுக்கு இந்த கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது.