சன நெரிசலில் சிக்குண்டு சற்றுமுன்னர் 3 பெண்கள் பலி! நால்வர் வைத்தியசாலையில்

Report Print Jeslin Jeslin in சமூகம்

மாளிகாவத்தை பகுதியில் சன நெரிசலில் சிக்குண்டு சற்று முன்னர் மூன்று பெண்கள் பலியாகியுள்ளனர்.

தனிப்பட்ட ரீதியில் வழங்கப்பட்ட நிவாரணங்களைப் பெற்றுக்கொள்ளச் சென்ற மூன்று பெண்களே இவ்வாறு பலியாகியுள்ளனர்.

குறித்த சன நெரிசலில் சிக்குண்டு மேலும் 4 பேர் காயமடைந்துள்ளதுடன் அவர்கள் சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

You My Like This Video