கல்முனையில் கஞ்சாவுடன் கைதான பெண் உட்பட நால்வருக்கு தண்டப்பணம்

Report Print Varunan in சமூகம்

கஞ்சாவுடன் கைதான பெண் வியாபாரி உள்ளிட்ட நால்வருக்கு தலா 9900 ரூபா தண்டப்பணம் விதித்து கல்முனை நீதிமன்று விடுவித்துள்ளது.

கடந்த புதன்கிழமை முற்பகல் 10 மணியளவில் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கடற்கரை வீதி கல்முனை 2இல் உள்ள வீடொன்றில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

இதற்கமைய உப பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட நடவடிக்கையால் சந்தேகநபரான பெண் வியாபாரி உள்ளிட்ட நால்வர் செய்யப்பட்டதுடன் இன்று கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இவ்வாறு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பெண் வியாபாரி உள்ளிட்ட நால்வருக்கு தலா 9900 வீதம் மொத்தமாக ரூபா 39 ஆயிரத்து அறுநூறு ரூபா தண்டப்பணம் செலுத்த கல்முனை நீதிவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

கைதாகி விடுதலையானவர்கள் 50, 30, 25, 49 வயதினை உடையவர்கள் எனவும், இவ்வாறு கைதானவர்களில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூவர் உள்ளடங்குகின்றனர் எனவும் தெரியவருகிறது.