தனிமைப்படுத்தல் முகாம்களில் இருப்பவர்களின் மூலம் இலங்கையில் இல்லாத நோய் பரவக்கூடிய சாத்தியம்?

Report Print Kamel Kamel in சமூகம்

தனிமைப்படுத்தல் முகாம்களில் இருப்பவர்களின் மூலம் இலங்கையில் இல்லாத நோய் தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு திரும்பி தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள சிலரின் ஊடாக மலேரியா காய்ச்சல் பரவக்கூடிய அபாயம் எழுந்துள்ளது என நுளம்புகள் குறித்த விஞ்ஞான கல்லூரியின் அதிபர் நஜித் சுமனசேன தெரிவித்துள்ளார்.

கந்தக்காடு, கட்டக்கெலியாவ மற்றும் மின்னேரிய பகுதிகளின் தனிமைப்படுத்தல் முகாம்களில் மலேரியா பரவிய நாடுகளிலிருந்து இலங்கை திரும்பியவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வாறான நபர்களிடம் இரத்த மாதிரிகளைப் பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அண்டிய பகுதிகளில் நுளம்பு ஒழிப்பு நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டிலிருந்து வருகை தந்தவர்களுக்கு மலேரியா தொற்றியிருந்தால் அவர்களின் ஊடாக இலங்கையில் மலேரியா பரவக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.