இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு

Report Print Rakesh in சமூகம்

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுடன் நேற்று 20 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1055 ஆக அதிகரித்துள்ளது என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

நேற்றுப் புதிய தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்களில் 5 பேர் கடற்படையினர் எனவும், ஏனைய 15 பேரும் டுபாயிலிருந்து நாடு திரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

தொற்றுக்குள்ளாகியவர்களில் மேலும் 20 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பியுள்ளனர். அதற்கமைய தொற்றிலிருந்து பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 604 ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் 9 பேர் உயிரிழந்துள்ள நிலையில் தற்போது 435 நோயாளிகள் 08 வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.