மீடியாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் பெண் ஒருவர் பலி

Report Print Kamel Kamel in சமூகம்

காலி மாவட்டம்- மீடியாகொட பிரதேசத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவமொன்றில் பெண் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர்.

மீடியாகொட பிரதேசத்தில் நேற்றைய தினம் இரவு இரண்டு குழுக்களுக்கு இடையில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

மீடியாகொட வாகீஸ்வர வீதியைச் சேர்ந்த வெல்லகே காந்தி என்ற மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

இந்த பெண்ணை கொலை செய்ததாக சந்தேகிக்கும் நபர் அயலவர் எனவும் அவர் ஓய்வு பெற்ற இராணுவச் சிப்பாய் எனவும் காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

இந்த மோதல் சம்பவத்தில் பெண்ணின் கணவர், மகன், சகோதரர் உள்ளிட்ட சிலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் கொலையாளி என சந்தேகிக்கப்படும் நபரும், கொலையுண்ட பெண்ணின் கணவரும் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மோதல் சம்பவத்தைத் தடுக்கச் சென்றவர்களே சம்பவத்தில் கொலையுண்ட மற்றும் காயமடைந்தவர்கள் என ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.