மத்திய கிழக்கில் 350 இலங்கையர்களுக்கு கொரோனா

Report Print Steephen Steephen in சமூகம்

மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரிந்து வரும் 350க்கும் மேற்பட்ட இலங்கையர்கள் கொரோனா வைரஸ் நோய் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக தெரியவருகிறது.

இவர்களில் பெரும்பாலானவர்கள் ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் இருப்பதாக இலங்க வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் 200க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது.

கத்தாரியில் 35 நோயாளர்களும், சவுதி அரேபியாவில் 12 நோயாளிகளும் இருப்பதுடன் மத்திய கிழக்கின் ஏனைய நாடுகளிலும் கொரோனா வைரஸ் தொற்றிய இலங்கையர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

துபாயில் இருந்து நேற்று முன்தினம் நாடு திரும்பிய 15 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.