ஊரடங்கு சட்டத்தை மீறியவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை

Report Print Ajith Ajith in சமூகம்

கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு சட்டத்தை மீறிய சுமார் 18 ஆயிரத்து 400 பேர் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மார்ச் 18 காலை 6 மணிமுதல் இன்று வெள்ளிக்கிழமை வரை ஊரடங்குச்சட்டத்தை மீறிய 18ஆயிரத்து 496 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 6991 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் ஊரடங்குச்சட்டத்தை மீறிய 528 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனையும் சேர்த்து மார்ச் 20ஆம் திகதி முதல் இன்று வரை 61ஆயிரத்து 621 பேர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.