அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள்

Report Print Varunan in சமூகம்

அம்பாறை - கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் மூன்று ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.

கல்முனை,கோமாரி பகுதியை சேர்ந்த 28 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு குழந்தைகளை நேற்று பெற்றெடுத்துள்ளார்.

திருக்கோவில், அக்கரைப்பற்று, வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட குறித்த பெண் மேலதிக சிகிச்சைக்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளதுடன், குழந்தைகளும் தாயும் நலமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த சத்திர சிகிச்சையினை மகப்பேற்று வைத்திய நிபுணர் ராஜிவ் விதானகே தலைமையிலான வைத்திய குழுவினர் மேற்கொண்டுள்ளனர்.

இதில் மூன்று ஆண் குழந்தைகளும் தலா1800 கிராம் , 2190கிராம், 2240 கிராம், நிறையுடன் ஆரோக்கியமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதே போன்று கடந்த மாதமும் இதே வைத்தியசாலையில் ஒரே சூலில் 3 குழந்தைகளை நிந்தவூரை சேர்ந்த பெண் ஒருவர் பெற்றெடுத்தமை குறிப்பிடத்தக்கது.