காத்தான்குடியில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேக நபரொருவருக்கு விளக்கமறியல்

Report Print Gokulan Gokulan in சமூகம்

மட்டக்களப்பு - காத்தான்குடியில் பிரபல உணவகம் ஒன்றில் கையடக்க தொலைபேசியை திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரொருவரை எதிர்வரும் 3 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிமன்ற நீதவான்ஏ.சி. றிஸ்வான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பிரதேசத்திலுள்ள உணவகத்தில் கடந்த 12 ம் திகதி உணவக முன்பகுதியில் கையடக்க தொலைபேசி காணாமல் போயுள்ளது.

இதனையடுத்து கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிரி கமராவை பார்த்தபோது அங்குஉணவு வாங்க வந்த நபர் ஒருவர் அதனை திருடிச் செல்வது கமராவில் பதிவாகியுள்ளது.

இது குறித்து பொலிஸாரிடம் முறைப்பாடு செய்த நிலையில் பொலிஸார் இது தொடர்பான விசாரணையில் கடற்கரை வீதி தாளங்குடாவைச் சேர்ந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே குறித்த விளக்கமறியல் உத்தரவிடப்பட்டுள்ளது.