கேப்பாப்புலவு விமானப்படை தளத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் ஆறு கடற்படையினருக்கு கொரோனா!

Report Print Varunan in சமூகம்

முல்லைத்தீவு, கேப்பாப்புலவு விமானப்படைத் தளத்தில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கேப்பாப்புலவு விமானப்படைத் தளத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த கடற்படையினர் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்றைய தினம் பரிசோதனைகளின் மூலம் உறுதி செய்யப்பட்டது.

இந்தநிலையிலேயே இன்றைய தினம் மேலும் அறுவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு கொரோனா தொற்று இருப்பதாக இனங்காணப்பட்ட ஆறு கடற்படையினரும் வெலிக்கந்த மருத்துவமனைக்கு இன்றைய தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சுகந்தன் இது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில்,

தனிமைப்படுத்தலுக்காக வெலிசறையிலிருந்து கேப்பாப்புலவு விமானப்படைத்தளம் உள்ளிட்ட தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அண்மையில் 400 கடற்படையினர்

கொண்டுவரப்பட்டனர்.

அவ்வாறு கொண்டுவரப்பட்டவர்களில் 99 பேருக்கு நேற்று முந்தினம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவ்வாறு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டவர்களில் இருவருக்கு

கொரோனாத் தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நேற்று வெலிகந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன் மேலும் ஆறு பேருக்கு தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது அவர்கள் ஆறு பேரும் வெலிகந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் வெலிசறையில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ள ஏனைய கடற்படையினரில் 40 பேருக்கான பரிசோதனைகள் இன்று இடம்பெறுவதுடன் ஏனையவர்களுக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.