போக்குவரத்து முறையில் உடனடி மாற்றம் செய்யுமாறு ஜனாதிபதி பரிந்துரை

Report Print Ajith Ajith in சமூகம்

வீதிகளில் வாகன நெரிசலை குறைப்பதற்காக நிறுத்தல் மற்றும் பயணித்தல் முறையை உடனடியாக அமுல்செய்யுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பரிந்துரை செய்துள்ளார்.

இதன்படி வீதிகளில் காலையிலும் மாலையிலும் வார நாட்களில் வாகன நெரிசலைக் குறைக்க அலுவலகங்களுக்கு வாகனங்களில் செல்வோரை பொதுப் போக்குவரத்து வாகனங்களில் பயணிப்பதை ஈர்க்கும் வகையிலான திட்டங்களை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பணித்துள்ளார்.

இந்தக் கலந்துரையாடலின்போது இலங்கை போக்குவரத்து சபையை இலாபம் ஈட்டும் சபையாக மாற்றுவது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

அத்துடன் பாடசாலை சிறுவர்களுக்கான பேருந்து சேவைகள் மேம்படுத்தப்படவேண்டும் என்ற விடயம் கலந்துரையாடப்பட்டது.