தங்குமிட விடுதியை திறந்த பெண்ணுக்கு கொரோனா அறிகுறி! தொடர்புடையவர் குறித்து விசாரணை

Report Print Steephen Steephen in சமூகம்
637Shares

கொரோனா வைரஸ் நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்ட பெண்ணொருவர் ஹோமாகமையில் உள்ள தற்காலிக தங்குமிட விடுதியை திறந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த பெண்ணுடன் ஆண் ஒருவரும் விடுதிக்கு வந்ததாகவும் அவர் பாதுகாப்பு படையுடன் சம்பந்தப்பட்ட நபர் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும் இந்த நபர் நேற்றைய தினம் விடுதியில் இருந்து வெளியேறியுள்ளார். அந்த நபரது பயணப் பொதியென சந்தேகிக்கப்படும் பொதியில் இருந்து இராணுவ அடையாள அட்டையை கைப்பற்றியதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

அந்த நபரை கண்டறிய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.கொரோனா வைரஸ் நோய் அறிகுறிகள் தென்பட்ட 45 வயதான பெண் 1990 அம்பியூலன்ஸ் வண்டி மூலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த பெண் சம்பந்தமாக நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனை அறிக்கை இன்று கிடைக்க உள்ளதாக ஹோமாகமை சுகாதார வைத்திய அதிகாரி ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

தங்குமிட விடுதிகள் திறப்படுவது தடை செய்யப்படடுள்ள நிலையில், குறித்த பெண் சட்டவிரோதமாக அதனை திறந்துள்ளார். அங்கு சேவையாற்றிய இளைஞர், விடுதியிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.