பயங்கரவாத மற்றும் குற்ற விசாரணைப் பிரிவு பிரதானிகள் இடமாற்றம்?

Report Print Kamel Kamel in சமூகம்
81Shares

பயங்கரவாத மற்றும் குற்ற விசாரணைப் பிரிவுகளின் பிரதானிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

பணி நிமித்தம் இவ்வாறு குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் விக்ரமராச்சிகே திலகரட்ன மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் சிரஸ்ட காவல்துறை அத்தியட்சகர் பிரசன்ன அல்விஸ் ஆகியோருக்கு இவ்வாறு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான பரிந்துரைகள் தேர்தல் ஆணைக்குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

பயங்கரவாத விசாரணைப் பிரிவின் பணிப்பரளராக மேல் மாகாண புலனாய்வுப் பிரிவு பணிப்பாளராக கடமையாற்றி வரும் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ நியமிக்கப்பட உள்ளார்.

இதற்கான அனுமதி கோரியும் தேர்தல் ஆணைக்குழுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக சிங்கள இணைய தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.