மரக்கூட்டுத்தாபன அனுமதியை தவறாக பயன்படுத்திய மரக்கும்பல் கைது

Report Print Navoj in சமூகம்
77Shares

வாழைச்சேனை வட்டார வன திணைக்களத்திற்கு சொந்தமான குடும்பிமலை காட்டுப்பகுதியில் மரக்கூட்டுத்தாபன அனுமதிப்பத்திரத்தினை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி மரக்கடத்தலில் ஈடுபட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபர்களிடமிருந்து இரண்டு வாகனங்களும், முதுரை, தேக்கை மரங்களும், பயன்படுத்திய உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட வன அதிகாரி எஸ்.ஏ.பி.எம்.பெரோ, மாவட்ட உதவி வன அதிகாரி எம்.ஏ.ஏ.குரே ஆகியோரின் மேற்பார்வையில் கீழ் வாழைச்சேனை வட்டார வன உத்தியோகத்தர் எஸ்.தணிகாசலம் தலைமையிலான வன உத்தியோகத்தர்கள் குடும்பிமலை மியான்கல் பிரதேசத்தில் மேற்கொண்ட நடவடிக்கையின் போது மரக்கூட்டுத்தாபன அனுமதிப் பத்திரத்தினை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தி முதுரை மற்றும் தேக்கை மரக்கடத்தில் ஈடுபட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்கள் நேற்று மாவட்ட நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்ட நிலையில் ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதுடன், மரம் ஏற்றுவதற்கு பயன்படுத்திய வாகனம் இதற்கு முன்னரும் இரண்டு தடவை சட்டவிரோத மரங்கள் ஏற்றப்பட்டு நீதிமன்றத்தினுடாக விடுவிக்கப்பட்ட வாகனம் என்பது குறிப்பிடத்தக்கது.