கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வின் கீழ் பணியாற்றும் மூன்று இளம் சட்டத்தரணிகள் நேற்று உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
இந்தநிலையில் குறித்த அடிப்படை உரிமைமீறல் மனு எதிர்வரும் ஜூன் முதலாம் திகதியன்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
சாலனா பெரேரா, ஜெகதீஸ்வரி முத்துசாமி மற்றும் ஷிபான் மஹ்ரூப் ஆகியோரே இந்த மனுவை தாக்கல் செய்துள்ளனர்.
இவர்கள் தமது மனுவில் குற்றப்புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் உட்பட்ட மூன்று அதிகாரிகள் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் சட்டரீதியற்ற ரீதியில் கைதுசெய்யப்பட்டுள்ளமை, தமது தொழில்களை பயமின்றி செயற்படுத்துவதற்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக மனுதாரர்கள் தமது மனுவில் தெரிவித்துள்ளனர்.