இரத்தினபுரி – கொட்டகெத்தன பிரதேசத்தில் நபர் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஹவத்த – கொட்டகெத்தன ஓபாத்த வீதியில் உள்ள வீடொன்றின் மலசல கூடத்திலிருந்து 42 வயது மதிக்கத்தக்க இரண்டு பிள்ளைகளின் தந்தை இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டிருக்கின்றார்.
குறித்த வீட்டில் வைத்தே இந்தப் படுகொலை இடம்பெற்றிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
சம்பம் இடம்பெற்ற போது, அவரது மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் வீட்டில் இல்லை என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
உயிரிழந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகள் மூன்று நாட்களாக வீட்டில் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கழிப்பறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், கொலைக்கான காரணம் தெரியவரவில்லை எனவும், தொடர்ந்தும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும், கஹவத்த பொலிஸார்.