தற்கொலைக்கு முயன்ற யுவதியை காப்பாற்றி தன்னுயிரை இழந்த இளைஞர்! நாளை இறுதி கிரியை

Report Print Murali Murali in சமூகம்

தலவாக்கலை - மேல்கொத்மலை நீர்த்தேக்கத்துக்குள் பாய்ந்து தற்கொலை செய்து கொள்ள முயற்சித்த யுவதி ஒருவரை காப்பாற்றும் நோக்கில் நீர்தேக்கத்துக்குள் பாய்ந்து உயிரிழந்த இளைஞரின் இறுதி கிரியைகள் நாளை இடம்பெறவுள்ளது.

தலவாக்கலை பாமஸ்டன் பகுதியை சேர்ந்த 2 பிள்ளைகளின் தந்தையான அப்தீன் ரிஷ்வான் (வயது – 32) என்பவரே இவ்வாறு உயிரிழந்திருந்தார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருந்தது.

உயிரிழந்த நபரின் சடலம் நுவரெலியா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில், இன்று உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நாளைய தினம் இறுதி கிரியைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தச்சு தொழில் செய்து வந்த குறித்த நபர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்த குடும்பம் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இதேவேளை, தற்கொலைக்கு முயன்ற யுவதி தற்போது லிந்துள்ள பிராந்திய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.