இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் கூட்டுறவு சங்க வர்த்தக நிலையங்களை மீளவும் திறக்க நடவடிக்கை!

Report Print Ajith Ajith in சமூகம்

இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் தற்போது மூடப்பட்டுள்ள அனைத்து கூட்டுறவு சங்க வர்த்தக நிலையங்களும் மீண்டும் திறப்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிகிரி கொப்பேகடுவ தெரிவித்தார்.

இரத்தினபுரியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது அவர் இதனை குறிப்பிட்டார்

கொரோனா தொற்று மற்றும் வெள்ளம், மண் சரிவு போனற அனர்த்தங்களினால் கூட்டறவு சங்க வர்த்தக நிலையங்களின் அவசியத்தை மக்கள் உணர்ந்துள்ளார்கள்.

பல்வேறு பொருளாதார, சமூக மற்றும் அரசியல் காரணங்களுக்காக கூட்டுறவு வியாபாரத்தில் சிறிது பின்னடைவுகள் இருந்தாலும் அதை ஒட்டுமொத்த சமூகத்திலிருந்து பிரிக்க முடியவில்லை.

இரத்தினபுரி மாவட்டத்தில் தற்போது குருவிட்ட, இம்புல்பே, கொலோன்ன பம்பரபோட்டுவ, போன்ற பிரதேசங்களில் 6 புதிய கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

எதிர்வரும் காலங்களில் சப்ரகமுவ மாகாணத்தில் கூட்டுறவு சங்க விற்பனை நிலையங்களை வலுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர் தெரிவித்தார்.