புலனாய்வுத்துறை பணிப்பாளர் உட்பட்ட 11 பேருக்கு இடமாற்றம்

Report Print Ajith Ajith in சமூகம்

குற்றப்புலனாய்வுத்துறையின் பணிப்பாளர் உட்பட்ட சிரேஸ்ட காவல்துறை உறுப்பினர்கள் 11 பேருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறை பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து குற்றப்புலனாய்வுத்துறையின் புதிய பணிப்பாளராக ஏஆர்பிஜே. அல்விஸ் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏற்கனவே பயங்கரவாத தடுப்பு விசாரணைப்பிரிவின் பணிப்பாளராக பதவி வகித்தவராவார்.

இந்த இடமாற்றங்கள் தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் அனுமதியுடனும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தேவைக்கருதிய கோரிக்கையின் அடிப்படையிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குற்றப்புலனாய்வுத்துறையின் சிரேஸ்ட காவல்துறை அதிபர் திலகரட்ன அமைச்சு பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஸ்ட காவல்துறை அதிபர் ரிவிபி அஜித் ஹேசிரி அமைச்சுப் பாதுகாப்பு பணிப்பாளர் நிலையில் இருந்து காவல்துறை கல்லூரியின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேல்மாகாண புலனாய்வு பிரிவு பணிப்பாளர் தலதுவ பயங்கரவாத தடுப்பு பிரிவு பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிரேஸ்ட காவல்துறை அதிபர் எச்சிஏ புஸ்பகுமார மேல்மாகாண புலனாய்வுப்பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே காவல்துறை கல்லூரியின் பணிப்பாளராக பதவிவகித்தார். சிரேஸ்ட காவல்துறை அதிகாரி கீதால் நுகேகொட பிரிவில் இருந்து விசேட விசாரணைகள் பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிடி குருசிங்க விசேட விசாரணைப்பிரிவின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜீஎன் ரட்நாயக்க, ரன்தெனிய, உதவிகாவல்துறை அத்தியட்சகர் ரூபசிங்க மற்றும் சில்வா காலிங்க ஆகியோரும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.