ரஷ்யாவில் இருந்து 261 பேர் நாடு திரும்பியுள்ளனர்

Report Print Steephen Steephen in சமூகம்

இலங்கை திரும்பும் நோக்கில் ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் தங்கியிருந்த இலங்கையர்களை ஏற்றிய விமானம் நேற்றிரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

261 இலங்கையர்கள் அந்த விமானத்தில் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக கட்டுநாயக்க விமான நிலைய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

நாடு திரும்பியவர்கள் கிருமி தொற்று நீக்கப்பட்டு, தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.