நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் சாத்தியம்!

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையின் வானிலையில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் மழையோ அல்லது இடியுடன் கூடியோ மழையோ பெய்யக்கூடும் என வானிலை மையம் எதிர்வு கூறியுள்ளது.

பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஊவா மாகாணத்தில் மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளன.

காற்று அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.