மலேரியா ஊசி மருந்தை கொரோனா நோயாளிக்கு பயன்படுத்துவது ஆபத்து

Report Print Steephen Steephen in சமூகம்

மலேரியா நோயாளிகளுக்கு சிகிச்கையளிக்க வழங்கப்படும் ஹைட்ரோக்சி குளோரொக்வின் ஊசி மருந்து கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்துவது பொருத்தமற்றது என பிரபல மருத்துவ சஞ்சிகையான லேன்செட் சஞ்சிகை மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்த ஊசி மருந்து காரணமாக கொரோனா வைரஸ் நோயாளிகள் உயிரிழக்கும் ஆபத்து அதிகம் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

எவ்வாறாயினும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இந்த மருத்துவ ஆலோசனைகளை கவனத்தில் கொள்ளாது, மலேரியா ஊசி மருந்தை கொரோனா நோயாளிகளுக்கு வழங்க வேண்டும் என்ற நிலைமைப்பாட்டை தொடர்ந்தும் பிரச்சாரம் செய்து வருகிறார்.

இந்த ஊசி மருந்தை பயன்படுத்துவதன் மூலம் கொரோனா நோயாளிகளுக்கு மாரடைப்பு ஏற்படக் கூடும் என சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ள போதிலும் ஜனாதிபதி ட்ரம்ப இந்த மருந்து பயன்படுத்தப்படுவதை ஊக்குவித்து வருவது தொடர்பாக பலரும் ஆச்சரியத்தை வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று சுட்டிக்காட்டியுள்ளது.