முப்படையினரில் 612 பேர் கொரோனாவுக்கு இலக்கு!600 பேர் கடற்படையினர்

Report Print Rakesh in சமூகம்

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளவர்களில் 612 பேர் முப்படையினர் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அவர்களில் 600 பேர் கடற்படையினர் எனவும், 11 பேர் தரைப்படையினர் எனவும்,ஒருவர் விமானப்படையைச் சேர்ந்தவர் எனவும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட முப்படையினருடன் நெருக்கமாகப் பழகியவர்களின் உறவினர்கள் 36 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.