வவுனியா மாங்குளத்தில் பலத்த காற்று: வாகன திருத்துமிடம் சேதம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா - செட்டிக்குளம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மாங்குளம் பகுதியில் இன்று காலை வீசிய பலத்த காற்றின் காரணமாக வாகன திருத்துமிடம் சேதமடைந்துள்ளது.

வாகன திருத்துமிடத்திற்கு அருகேயிருந்த தென்னைமரம் சரிந்து விழுந்ததன் காரணமாக இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

வவுனியாவில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடனான காலநிலை நிலவி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.