அபாய வலயங்களிலிருந்து வவுனியாவிற்கு பேருந்துகளில் அழைத்து வரப்பட்ட மக்கள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

கொரோனா தொற்று அச்சம் காரணமாக இலங்கையில் சில மாவட்டங்கள் அபாய வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அப்பகுதிகளில் சிக்கியுள்ள வெளிமாவட்ட மக்களை அவர்களின் இடங்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஒரு தொகுதியினர் நேற்றிரவு வவுனியாவிற்கு அழைத்து வரப்பட்டனர்.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் வவுனியா , மன்னார் மாவட்டத்தினை சேர்ந்த 25க்கு மேற்பட்ட மக்கள் அபாய வலயங்களிலிருந்து அழைத்து வரப்பட்டு அந்தந்த பகுதி பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்ட பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

அந்த வகையில் குறித்த பேருந்தில் வருகை தந்த வவுனியாவை சேர்ந்த மக்கள் வவுனியா பொலிஸ் நிலையத்தில் பதிவினை மேற்கொண்ட பின்னர் வீடு திரும்பியுள்ளனர்.