வரலாற்று பிரசித்தி பெற்ற கண்ணகை அம்மன் ஆலய திருக்குளிர்த்தி சடங்கு தொடர்பில் அறிவிப்பு

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

வரலாற்று பிரசித்தி பெற்ற தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தின் வருடாந்த திருக்குளிர்த்தி சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கொரோனா தடுப்பு சுகாதார சட்டவிதிப்படி பக்தர்கள் ஒன்றுகூட அனுமதியில்லை என திருக்கோவில் பிரதேச செயலாளர் தங்கையா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

திருக்கோவில் பிரதேச செயலகத்தில் அம்மன் குளிர்த்தி தொடர்பான 2ஆம் கட்டகூட்டமொன்று நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது.

கூட்டமுடிவின் போது கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

சடங்குகளை கப்புகனார் வழமைபோல் செய்வார்கள் என்ற போதும் பக்தர்கள் கலந்து கொள்ள முடியாது.

எது எப்பிடியிருப்பினும் எதிர்வரும் 29ஆம் திகதி 3ஆம் கட்ட இறுதிக்கூட்டத்தை நடத்தி நாட்டின் அப்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு இறுதி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

குறித்த கூட்டத்தில் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி மென்டிஸ்அப்பு பிரசாத் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஆலய நிர்வாக சபையினர் கலந்து கொண்டிருந்தனர்.