சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் சமூக இடைவெளியை பேணி விசாரணைகள் முன்னெடுப்பு

Report Print Varunan in சமூகம்

அம்பாறை - சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் சிறு குற்ற விசாரணைகள் சமூக இடைவெளியை பேணி மர நிழலில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மைக்காலமாக கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை தொடர்ந்து சுகாதார அமைச்சு, ஜனாதிபதி செயலணி பல்வேறு சுகாதார செயல்திட்டங்களை மக்களின் நலன் கருதி அமுல்படுத்தி வருகின்றது.

இதனடிப்படையில் நாடு பூராகம் உள்ள அரச தனியார் நிறுவனங்களில் சுகாதார பழக்கவழக்கங்கள் தொடர்பாக விளக்கங்கள் பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதில் குறிப்பாக கைகழுவுதல் சமூக இடைவெளி முகக்கவசம் அணிதல் என்பன அடிப்படை சுகாதார செயற்பாட்டில் கடைப்பிடிக்கப்படுவதுடன் அம்பாறை மாவட்டம் சவளக்கடை பொலிஸ் நிலையத்தில் உள்ள பொலிஸாரின் பல்வேறு பிரிவுகளிலும் சவளக்கடை பிரதம பொலிஸ் பரிசோதகர் எம்.எம்.அஷ்ரப் தலைமையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.