வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

Report Print Steephen Steephen in சமூகம்

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் தாம் ஒருவரை கைது செய்துள்ளதாக கல்கிஸ்சை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கல்கிஸ்சை பொலிஸ் பிரிவின் அத்திட்டிய போ செவன பிரதேசத்தில் வீடொன்றில் துப்பாக்கி மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் இன்று மதியம் 12.45 அளவில் அந்த வீட்டை சோதனையிட்டுள்ளனர்.

வீட்டை சோதனையிட்ட பொலிஸார் கைத்துப்பாக்கி, ரவைக்கூடு, நான்கு தோட்டக்களுடன் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

அத்திட்டிய போ செவன பிரதேசத்தை சேர்ந்த 69 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் நாளைய தினம் கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். கல்கிஸ்சை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.