சீசெல்ஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட நோயாளிகள்

Report Print Ajith Ajith in சமூகம்

சீசெல்ஸ் நாட்டில் இருந்து ஒரு தொகுதி நோயாளிகள் இலங்கைக்கு சிகிச்சைகளுக்காக அழைத்து வரப்பட்டுள்ளனர்.

நல்லெண்ண அடிப்படையில் இவர்கள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டதாக ஜனாதிபதியின் மேலதிகச் செயலாளர் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

இந்த நோயாளிகள் அனைவரும் நாட்பட்ட நோய்கள், சிறுநீரக மற்றும் இருதய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களாவர்.

இவர்கள் அனைவரும் இலங்கைக்கு வந்ததும் பீ.சீ.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் தனிமைப்படுத்தல் நிலையத்தில் 14 நாட்கள் தங்கியிருந்த பின்னர் அவர்களுக்கு தனியார் வைத்தியசாலை ஒன்றில் சிகிச்சை அளிக்கப்படவுள்ளதாக கொலம்பகே குறிப்பிட்டுள்ளார்.