இரண்டு நாள் நாடு தழுவிய ஊரடங்கு சட்டத்தின்போது 900 சோதனை சாவடிகள்

Report Print Ajith Ajith in சமூகம்

நாளை 24ம் திகதியும், நாளை மறுநாள் 25ம் திகதியும் நாடளாவிய ரீதியில் அமுல் செய்யப்படவுள்ள ஊரடங்கு சட்டத்தின்போது சுமார் 900 சோதனை சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறையின் உதவி காவல்துறை அதிபர் அஜித் ரோஹன இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது பொதுமக்கள் ஒன்றுக்கூடுவதற்கு அனுமதிக்கப்படமாட்டாது என்று அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இன்று இரவு 8 மணிக்கு நாடளாவிய ரீதியில் அமுல் செய்யப்பட்டுள்ள ஊரடங்குச்சட்டம் எதிர்வரும் 26ம் திகதி செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும்.

26ம் திகதி முதல் ஊரடங்குச்சட்டத்தில் தளர்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன்படி அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணிவரை ஊரடங்குச்சட்டம் அமுலில் இருக்கும்.

அதேநேரம் கொழும்பு, கம்பஹாவை தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையில் பயணங்கள் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.