35 பொலிஸ் அதிகாரிகளுக்கு பதவியுயர்வு

Report Print Ajith Ajith in சமூகம்

இலங்கையில் காவல்துறையின் 35 அதிகாரிகள் சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர்களாக பதவியுயர்த்தப்பட்டுள்ளனர். காவல்துறையின் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.

இவர்கள் அனைவரும் தற்போது காவல்துறை அத்தியட்சகர்களாக பதவி வகித்து வருகின்றனர். இந்த பதவியுயர்வுகள் மே 9, 2020 முதல் நடைமுறைக்கு வருகின்றன.

தேசிய காவல்துறை ஆணைக்குழு மற்றும் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் அனுமதியுடனேயே இந்த பதவியுயர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.