யாழில் இராணுவத்தினர் மீது தாக்குதல்! மூவர் கைது

Report Print Sumi in சமூகம்

இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் மூவரை இராணுவத்தினர் பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் உள்ள இராணுவ காவலரணில் நின்ற இராணுவத்தினர் மீது இன்று மாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இம்மூவரும் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் என்றும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.

இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய மூவரும் கோப்பாய், அனலைதீவு மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

மூவரிடமும் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகின்றதுடன், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.