மன்னார் தமிழர்களே மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபராக நியமிக்கப்பட வேண்டும் : வல்பொல சரண தேரர்

Report Print Ashik in சமூகம்

மன்னார் மாவட்டத்தில் பிறந்து இந்த மண்ணிலேயே கல்வி கற்று வளர்ந்த தமிழர்களே மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உற்பட அனைத்து பதவிகளுக்கும் நியமிக்கப்பட வேண்டும் என்று மன்னார், முருங்கன் 'ரஜமஹா விகாரை'விகாராதிபதி வல்பொல சரண தேரர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்துள்ளார்.

மன்னார் உயிலங்குளம் பிரதான வீதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி) அலுவலகம் இன்று சனிக்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும், அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா குறித்த அலுவலகத்தை வைபவ ரீதியாக திறந்து வைத்துள்ளார்.

இதன் போது அமைச்சருடன் உரையாடுகையிலேயே மன்னார், முருங்கன் 'ரஜமஹா விகாரை'விகாராதிபதி வல்பொல சரண தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் அமைச்சரிடம் மேலும் தெரிவிக்கையில்,

நீங்கள் சரியாக யோசிக்க வேண்டும். ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸ,பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோருடன் சேர்ந்து கடமையாற்ற வேண்டும்.

நான் உங்களுடன் முன்னுக்கு நிற்கின்றேன். அனைவரும் வேலை செய்ய வேண்டும்.வேலை வாய்ப்பை பெற்றுக்கொடுக்க வேண்டும். குறிப்பாக புத்தளம் மற்றும் வேறு இடங்களில் இருந்து இங்கு வந்து வேலை வாய்ப்பை பெற்றுக் கொள்ளுகின்றனர்.

காலி மாவட்டத்தில் உள்ள சிங்களவர் ஒருவர் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபராக நியமிக்கப்பட்டு இருந்தார்.

அவர் வேறு மாவட்டத்தில் இருந்து மன்னாரிற்கு வந்த அரசாங்க அதிபர்கள் உள்ளனர்.

மன்னார் மாவட்டத்தில் பிறந்து இந்த மண்ணிலேயே கல்வி கற்று வளர்ந்த தமிழர்களே மன்னார் மாவட்டத்தில் அரசாங்க அதிபர் உட்பட அனைத்து பதவிகளுக்கும் நியமிக்கப்படவேண்டும் என்று தெரிவித்துள்ளார்.