பாரிய அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தும் நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகள் காலம் தாழ்த்தப்படும்

Report Print Kamel Kamel in சமூகம்

பாரிய அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தும் நிறுவனங்களுக்கான கொடுப்பனவுகள் காலம் தாழ்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட நாட்டில் முன்னெடுக்கப்பட்டு வரும் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தும் நிறுவனங்களுக்கு வழங்கும் கொடுப்பனவுகளை ஐந்தாண்டுகள் வரையில் காலம் தாழ்த்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் குறித்த நிறுவனங்களுக்கு நிதி அமைச்சு அறிவித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்கள் முன்னெடுத்து வருகின்றன.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி நிலைமையினால் அபிவிருத்தி திட்டங்களுக்கான கொடுப்பனவுகளை இவ்வாறு காலம் தாழ்த்தி செலுத்துவதற்கு நேரிட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகின்றது.