அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை

Report Print Varunan in சமூகம்

வெளி மாவட்டங்களில் இருந்து பணிக்கு திரும்பிய அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைப் பணிப்பாளர் கு.சுகுணன் அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொடர்பான அம்பாறை மாவட்டத்தின் நிலவரம் குறித்து நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தல் விடயத்தில் ஒரு சிறிய விடயத்தை நாம் கூறலாம் என்று நினைக்கின்றேன். போக்குவரத்து நடவடிக்கைகள் முன்னெடுத்து செல்லப்படுகின்றது.

வெளி மாவட்டங்களில் இருந்து பணிக்கு திரும்பிய அரச மற்றும் தனியார் உத்தியோகத்தர்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.

இருந்த போதிலும் பாதுகாப்பு வலயத்தில் உள்ள மாவட்டத்திலிருந்து குறித்த சூழ்நிலையில் வருபவர்கள் தங்களை சுய கட்டுப்பாட்டுடன் பொதுச் சுகாதார பழக்கவழக்கங்களுடன் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்,