பரந்தன் இளைஞன் கழிவுப்பொருட்களால் தயாரித்த மோட்டார் வாகனத்தினை பார்வையிட்டார் சிறீதரன்

Report Print Arivakam in சமூகம்

கிளிநொச்சி - பரந்தன் இளைஞனால் கழிவுப்பொருட்களை வைத்து தயாரித்த மோட்டார் வாகனத்தினை தமிழ் தேசியகூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் இன்று பார்வையிட்டுள்ளார்.

பரந்தன் பகுதியில் கழிவு பொருட்களை கொண்டு அருள்தாஸ் றொசான் என்னும் இளைஞன் மோட்டார் வாகனத்தினை தயாரித்து சாதனைபுரிந்துள்ளார்.

இந்த உற்பத்திக்கு குடும்ப பொருளாதாரம் பாரிய தடையாக இருந்துள்ளது. எனினும் நீண்ட கால முயற்சியின் வெளிப்பாடாக இவ்வாறு மோட்டார் வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்தும் அந்த வாகனத்தினை வடிவமைப்பதற்கு அந்த இளைஞன் எதிர்கொள்ளும் பொருளாதார சவால்களை நிவர்த்தி செய்யும் ஏற்பாடுகளை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

குறித்த இளைஞன் நாடாளுமன்ற உறுப்பினருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

பழுதடைந்த மோட்டார் சைக்கிள் எஞ்சினை திருத்தி அதனை குறித்த வாகனத்திற்கு பயன்படுத்தியதுடன், கழிவாக வீசப்பட்டிருந்த வாகன பொருட்களையும் பயன்படுத்தியே குறித்த மோட்டார் வாகனத்தை தயாரித்துள் வடிவமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.