மலையகத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் அமைதியான முறையில் ரமழான் பண்டிகை கொண்டாட்டம்

Report Print Thirumal Thirumal in சமூகம்

நாடு முழுவதும் இன்று பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில்,தமது வீடுகளுக்குள்ளேயே சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டு அமைதியான முறையில் இம்முறை ரமழான் பண்டிகையை மலையகத்தில் வாழும் முஸ்லிம் மக்கள் கொண்டாடியுள்ளனர்.

அத்துடன், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் முழுமையாக நீங்கி, பாதிக்கப்பட்டவர்கள் குணமடைந்து, நாடு மீண்டும் வழமைக்கு திரும்ப வேண்டும் எனவும் அவர்கள் இறைவனிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மக்கள் கூடுவதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை பின்பற்றியே நிகழ்வுகள் நடத்துவதற்கு கட்டுப்பாட்டுகளுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பள்ளிவாசல்கள் மூடப்பட்டுள்ளன.

இதனால் மக்கள் வீட்டுக்குள் இருந்து சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி தொழுகையில் ஈடுபட்டு பெருநாளை அமைதியாகக் கொண்டாடியுள்ளனர்.

ஹட்டன், பொகவந்தலாவ உட்பட மலையகத்தின் பல நகரங்களிலும் இந்நிலைமையை காணக்கூடியதாக இருந்தது.