வெலிசறை கடற்படை சிப்பாய்களில் 626 பேருக்கு கொரோனா தொற்று

Report Print Rakesh in சமூகம்

இலங்கையில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியவர்களில் 626 பேர் கடற்படையினர் என்று கடற்படையின் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.

இவர்கள் வெலிசறை கடற்படை முகாமைச் சேர்ந்த சிப்பாய்கள் எனவும், அவர்களில் 293 பேர் குணமடைந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

333 கடற்படையினர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுகின்றனர் எனவும், அவர்களில்73 பேர் வெலிசறையிலுள்ள கடற்படை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெறுகின்றனர்எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.